29th March 2022 10:25:03 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரின் 34 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கீதா அத்துகோரள அவர்கள் கெமுனு ஹேவா படையணி குடும்பங்களுக்கு மருத்துவ உபகரணங்கள், புலமைப்பரிசில்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்குதல் உட்பட பல நலன்புரி திட்டங்களை சனிக்கிழமை (19) முன்னெடுத்தார்.
இதன்படி இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, தெலபனகம ஆரம்ப மருத்துவ நிலையம் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படையலகுகளில் உள்ள மருத்துவ நிலையங்கள் மற்றும் குருவிட்ட உள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகம் ஆகியவற்றிற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாகங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
23 வது கெமுனு ஹேவா படையணியின் சார்ஜென்ட் ஒருவரதும் 8 கெமுனு ஹேவா படையணியின் சார்ஜென்ட் ஒருவரதும் இரு பிள்ளைகளுக்கு மாதாந்தம் தலா ரூபாய் 5000/= பணத்தொகை அவர்கள் குணமடையும் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, 19 கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் மூன்று பிள்ளைகளுக்கும், 15 (தொ) கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் மூன்று பிள்ளைகளுக்கும் 12 மாத காலத்திற்கு 5000/= என்ற நிதி உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில், 23 வது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஒருவரினதும் சிப்பாய் ஒருவரினதும் பிள்ளைகளுக்கு மருத்துவ தேவைகளுக்காக அதே சந்தர்ப்பத்தில் பண நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிரி, சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கீதா அத்துகோரள, கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், மற்றும் சிப்பாய்கள் இணைந்து கொண்டனர்.