04th June 2022 10:16:13 Hours
குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி ருவினி லமாஹேவா அவர்கள் தனது கடமைகளை 13 மே 2022 அன்று பொறுப்பேற்றார்.
முன்னாள் தலைவி திருமதி கீதா அத்துகோரள அவர்கள் தனது பதவிக்காலத்தில் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவைக்காக தனது நன்றியைத் தெரிவித்ததோடு, சேவை வனிதையர் பிரிவின் எதிர்காலப் பாத்திரங்களுக்கும் அதே உதவியைக் கோரினார்.
வளாகத்திற்கு வந்தடைந்த புதிய தலைவியை கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்