05th August 2022 20:52:12 Hours
நலன்புரி திட்டங்களில் ஒன்றாக கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ராகம ‘ரணவிரு செவன’ நலன் விடுதி 2 முழுமையாக புனரமைக்கப்பட்டு 2022 ஜூலை 10 அன்று அதிகாரிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா, அவரது நிர்வாக சபை மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இது தொடர்பாக முயற்சியை முன்னெடுத்தனர். தொழில்நுட்பத் தகுதி பெற்ற கெமுனு ஹேவா படையினரின் தீவிர ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இந் நிகழ்வில் நலன் விடுதியின் போர்வீரர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா, சேவை வனிதையர் பிரிவு பெண்கள், ரணவிரு செவன நலன் விடுதியின் தளபதி பிரிகேடியர் ஜானக வித்தனாராச்சி, கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்ன, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
புனரமைப்புப் பணிகளைச் மேற்கொண்ட கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களுக்கு ரணவிரு செவன நலவிடுதியின் தளபதியினால் பாராட்டுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.