26th August 2022 15:48:48 Hours
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினர் சில இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து கம்புருபிட்டிய 'அபிமன்சல 2' இல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்கு 13 ஓகஸ்ட் 2022 அன்று இசை நிகழ்சிகளை ஏற்பாடு செய்தனர்.
இசைக்கலைஞர்களால் அந்த போர்வீரர்களுக்காக இசை மற்றும் பாடல்களை இசைத்ததுடன், ஒவ்வொரு போர் வீரருக்கும் கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது. கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருச்சினி லமாஹேவா அவர்களின் ஏற்பாட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் பங்கேற்றினர்.