18th November 2022 11:42:45 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் திங்கட்கிழமை (7) அபிமன்சல 3’ நல விடுதியில் வசிக்கும் போர்வீரர்களை சந்திக்கும் நோக்கில் விஜயம் மேற்கொண்டனர்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா உட்பட சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுவரும் போர்வீரர்களுடன் உரையாடினர்.
சேவை வனிதையர் பிரிவினர் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் உரையாடியதை தொடர்ந்து அவர்கள் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்கு முன் பரிசுப் பொதிகளை வழங்கினர். கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரின் விஜயத்தின் போது 50 தேநீர் கோப்பைகள் மற்றும் தட்டுகளை நலவிடுதிக்கு வழங்கியதுடன், புறப்படுவதற்கு முன்னர் அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தனர்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா, பங்கொல்ல அபிமன்சல 3- இன் தளபதி கேணல் அருண விஜேகுணவர்தன, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.