Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th September 2023 08:36:31 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம்

இராணுவத்தில் சிறந்து விளங்கி ஓய்வுபெற்ற/இறந்த இராணுவ வீரர்களின் 51 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு ரூ.25,000/- வங்கி வைப்புத் தொகை, பாடசாலை பைகள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உண்டியல் போன்ற உபகரணங்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் முன்மொழிவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது மற்றும் அவர்களின் பொருளாதார கஷ்டங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்வின் போது, வெவ்வேறு படையணிகளைச் சேர்ந்த பத்து பிள்ளைகள் அடையாளமாக அந்த புலமைப்பரிசைப் பெற்றனர். அதற்கமைய அதிகாரவாணையற்ற அதிகாரி I இன் சகோதரிக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.

அத்துடன் கோப்ரல் ஒருவரின் நிறைவு செய்யாத வீட்டின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு உதவியாக, திருமதி லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அதே சந்தர்ப்பத்தில் 3 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் பங்கேற்ற பிள்ளைகளுடன் குழு படம் எடுத்ததுடன் மாதாந்த கூட்டம் நிறைவடைந்தது.

மாதாந்த கூட்டம், திருமதி ஜானகி லியனகே தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. நிறைவேற்று செயலாளர் மேஜர் எச்.எஸ்.வன்னியாராச்சி அவர்கள் கடந்த கூட்டத்தின் அறிக்கையை வாசித்த பின்னர் புதிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பிஜீபீசீ குமாரி அவர்கள் வரவு செலவு அறிக்கைகளை கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதியில், உறுப்பினர்கள் அவர்கள் புறப்படுவதற்கு முன்னரும் குழு படங்களை எடுப்பதற்கு முன்னரும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கலந்துரையாடினர்.

புதிய செயற்குழு உறுப்பினர்கள் வருமாறு:

உதவிச் செயலாளர் - திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல

பொது தொடர்பு அதிகாரி – திருமதி சாந்தி அபேசேகர

உதவி பொது தொடர்பு அதிகாரி - திருமதி ஒமிலா ஜயவர்தன

முழு திட்ட மேற்பார்வை அதிகாரி - திருமதி நந்தனி சமரகோன்