28th January 2023 15:40:57 Hours
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்திருந்த விசேட போதி பூஜை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 பெல்லங்வில ரஜ மகா விகாரையில் இடம்பெற்றது.
கெமுனு ஹேவா படையணியில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு ஆசிகள் பெறப்பட்டதுடன், சேவையாற்றும் உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் ஆசிர்வாதம் கோரும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா, உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.