Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th March 2023 11:25:09 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் கற்றல் உபகரணங்கல் வழங்கல்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ஆண்டு நிறைவினை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் 20 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க அவர்களால் இந்த நலன்புரி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இவ்வருடம் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் 16 பிள்ளைகளுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்குப் பின்னர் புதிய பாடசாலைகளுக்கு அனுமதிக்காக காத்திருக்கும் 04 பிள்ளைகளுக்கு தலா 4,000.00/= பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டார்.