17th April 2023 12:36:06 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு வருடாந்த பொதுக்கூட்டம் 2023 பெப்ரவரி 18 அன்று குருவிட்ட படையணி தலைமையகத்தில் அதன் தலைவி திருமதி ருவினி லமாஹேவா தலைமையில் நடைபெற்றது.
பொதுக்கூட்ட சம்பிரதாயங்களின் அலுவலகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். டாக்டர் ஹிமால் சமிந்த ‘வயதானாவுடன் ஏற்பட கூடிய நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள்’ தொடர்பாக விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.
அன்றைய நிகழ்ச்சியின் மேலும் ஒரு பகுதியாக கெமுனு ஹேவா படையணி மறைந்த சிப்பாய்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் எழுதுபொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்படடன். அவரது விதவை மனைவி மற்றும் பிள்ளைகள் குறி்த்த பரிசில்களை தலைவியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அன்றைய நிகழ்விற்கு மேலும் முக்கியத்துவமளிக்கும் வகையில் சேவை வனிதையர் பிரிவின் தலைவி படையிணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமா ஹேவாவுடன் இணைந்து வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேவை வனிதைய பிரிவின் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர்கள் , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.