30th May 2023 22:06:55 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், “சுய தொழில் வாய்ப்புகளை வலுப்படுத்துதல்” தொடர்பான செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (21) வர்த்தக ஊக்குவிப்பு சபையின் தலைவி திருமதி குமுதுனி குணசேகர தலைமையில் குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
உணவு வகைகளை சிக்கனமாக தயாரித்தல், கைவினைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்களைப் பாதுகாத்தல் போன்றவற்றின் மூலம் 'சுய தொழில்' முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு, அத்தகைய நடவடிக்கைகள் ஒரு குடும்பத்தின் நிதி வாய்ப்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை முதன்மையாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுகப்பட்டது.
விரிவுரையில் 54 இராணுவ வீரர்களின் துணைவியர்கள் மற்றும் 48 சிப்பாய்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது ‘முல்தென அம்மாத்தா’ (அம்மாவுக்கு முன்னுரிமை) புத்தகத்தின் பிரதிகளை வழங்கினார்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க மற்றும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.