31st May 2023 20:31:04 Hours
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஈஏடீபீ எதிரிசிங்க பீஎஸ்சி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் கருத்தாக்கத்தின் பேரில், வீழ்ந்த போர் வீரர்களின் பெற்றோரின் உன்னத தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (மே 20) விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
2009 மே மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக வீரமிக்க மகன்கள் மற்றும் மகள்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பைப் பாராட்டி, இந்த நிகழ்விற்கு 50 போர்வீரர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் போது, அவர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், 'தர்ம' சொற்பொழிவும் நடைபெற்றது. மேலும், பாராட்டு பெற அங்கு வந்த தாராள மனப்பான்மையுள்ள பெற்றோருக்கு காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்தவர்களின் பெற்றோருக்குப் பரிசுப் பொதிகள் வழங்கியதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும், 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க பீஎஸ்சி அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
மதிப்புமிக்க பெண்கள் மற்றும் படையினர்கள் இந்நிகழ்வு கலந்து கொண்டனர்.