16th June 2023 21:53:40 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் கிளை கெமுனு ஹேவா படையணியின் வீடற்ற காலாட் படைவீரரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தியத்தலாவையில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தது, கெமுனு ஹேவா படையணியின் வேண்டுகோளுக்கு இணங்க அனுசரணையாளர் திரு விஜேரத்ன பண்டார ரன்முத்துகல மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கிய அனுசரணையுடன் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவும் இணைந்து இத் திட்டத்ததை முன்னெடுத்தது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 09) அன்று நடைபெற்ற வைபவத்தில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க, கெமுனு ஹேவா படையணியின் படைத தளபதி மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க பீஎஸ்சி, மற்றும் கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ. அவர்களும் கலந்து கொண்டனர்.
முதலாவது கெமுனு ஹேவா படையினர் தமது நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.