29th June 2023 21:55:38 Hours
இரண்டு நன்கொடையாளர்களான திரு.பிரஜனித்த புஷ்பகுமார மற்றும் திரு.ஜெயநாத் டி சில்வா ஆகியோரினால் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவிற்கு மூன்று புதிய சக்கர நாற்காலிகளை ஜூன் 17 அன்று இரத்தினபுரி, குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் திருமதி பிரியங்கா கலப்பத்தி அவர்களினால் அந்த சக்கர நாற்காலிகளை கெமுனு ஹேவா படையணியின் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு வழங்கினர்.
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்டபிள்யூபி வெலகெதர ஆர்டப்ளியூபீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.