17th February 2022 09:14:41 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி லியனகே தலைமையில் நடைபெற்றது.
இராணுவ தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள் இலங்கை சிங்கப் படையணி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் கடந்தகால திட்டங்கள், நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை மதிப்பாய்வு செய்ததுடன், பங்கொல்ல 'அபிமன்சல 3'க்கு விஜயம் செய்தனர். இதன் போது இலங்கை சிங்கப் படையணியின் பிரதித் தளபதி மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் தலைமையக கட்டளை அதிகாரி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.