21st March 2022 19:13:05 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 2022 மார்ச் 12 அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி லியனகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை சிங்க படையணி தலைமையக பிரதான கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றதுடன், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் விராஜ் விமலசேன, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை சிங்க படையணி பற்றிய காணொளி ஆவணப்படம் திரையிடப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் சந்தன போவல வரவேற்பு உரையை ஆற்றுவதற்கு முன்னர், வீரமரணம் அடைந்த இலங்கை சிங்க படையணி போர் வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் மங்கல விளக்கை ஏற்றியதைத் தொடர்ந்து இலங்கை சிங்க படையணி கலாசாரக் குழுவின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
வஸ்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் பணிபுரியும் சிரேஷ்ட சமையற்காரர் திரு மனோஜ் அமரதீப்தி அவர்களால் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களுக்கு சமையலைப் பற்றிய செயலமர்வு ஒன்றை நடத்தினார்.
செயலமர்வின் போது, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ‘சிக்கன் அண்ட் ஸ்வீட் கார்ன் சூப்’, ‘சீசர் சாலட்’ மற்றும் ‘யாழ்.நண்டு கறி’ போன்றவற்றை வீட்டில் தயாரிக்கும் முறை பற்றி கற்பிக்கப்பட்டது.
இயக்குநரும் நடிகருமான தேசமான்ய திரு நாலக ஹபுகொட அன்றைய நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
சிரேஷ்ட ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி அமா திஸாநாயக்க அவர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘நல்ல திருமண வாழ்க்கைக்கு மனைவியின் பங்கு’ மற்றும் ‘வீட்டுப் பிரச்சினைகளைத் தணிப்பது எப்படி’ என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுக்குக் விரிவுரையையும் வழங்கினார்.
அழைக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினருக்கு அவர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவைகளைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கான பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஜீவனி விமலசேன அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.