22nd June 2022 21:19:29 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் 12 வது தலைவியாக திருமதி ஒமிலா ஜெயவர்தன அவர்கள் மே 23 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் உள்ள இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் சமய ஆசிகள் மற்றும் வாழ்த்துகளுக்கு மத்தியில் பதவியேற்றார்.
அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின்அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் புதிய தலைவி கையொப்பமிட்டார்.
கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், படையணி வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து புதிய தலைவி தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின்செயலாளர் திருமதி ஜீவனி விமலசேன, சிரேஷ்ட அதிகாரிகள், படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.