29th June 2022 17:49:28 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் தங்கள் சமூகத் திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பேபுஸ்ஸ சிறப்புத் திறன்களைக் கொண்ட 'அபே லமாய்' பாடசாலை பிள்ளைகளுக்காக உலர் உணவுகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் கொண்ட பொதிகளை வழங்கினர்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் 25 ஜூன் 2022 நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் போது இந் நிகழ்ச்சி நடை பெற்றது.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அவர்களை இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் மற்றும் 'அபே லமாய்' சிறப்புக் கல்விப் பாடசாலையின் அதிபர் திருமதி நெத்மினி முத்துமாலை ஆகியோர் வரவேற்றனர்.
அனைத்து சேவை வனிதையர் உறுப்பினர்களும் இணைந்து ‘அபே லமாய்’ சிறப்புக் கல்விப் பாடசாலையின் அனைத்து பிள்ளைகளுக்கும் மதிய உணவை வழங்கினர்.
இதே சந்தர்ப்பத்தில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு இப்பாடசாலைக்கு 5 மெத்தைகள், கட்டில் விரிப்புகள் மற்றும் கைத்தறி போன்றவற்றை நன்கொடையாக வழங்குவதற்கு புலம்பெயர்ந்து இத்தாலியில் வசிக்கும் திரு பெர்னாண்டோ கிறிஸ்டெஜ், திரு ஜோசப் சிறிமான்ன மற்றும் திரு பெர்னாண்டோ வெரோன் பிரான்செஸ்கோ ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இலங்கை சிங்க படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.