09th September 2022 15:02:21 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு தனது புலமைப்பரிசில் விருது வழங்கும் திட்டத்தின் மேலும் ஒரு கட்டமாக 'ரணவிரு அபிநந்தன பூஜை - 2022' ஒவ்வொரு மாதமும் (ரூ. 2750/- பெறுமதியான), 26 புலமைப்பரிசில்களையும் 26 அகராதிகள், மற்றும் பாடசாலை உபகரணங்கள் கொண்ட 34 பொதிகளை வழங்கியுள்ளது. சனிக்கிழமை (3) அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் அதன் குடும்பங்களின் மாணவர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இரண்டு சிறப்பு புலமைப்பரிசில்கள் (ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000/-) வழங்கப்பட்டது. இரு நன்கொடையாளர் அமைப்புகளின் சார்பாக திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் ஒருங்கிணைக்கப்பால் இத் திட்டம் சாத்தியமானது.
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் இணைந்து அனுசரணை வழங்கியதுடன், பரிசளிப்பு விழா இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவிகளில் ஒருவரான திருமதி இனோகா கருணாரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜெயவர்தன மற்றும் இலங்கை சிங்கப் படையணி படைத் தளபதியும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘ரணவிரு அபிநந்தன பூஜை - 2022’ புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை சிங்கப் படையணி குடும்பங்களின் ஏழு மாணவர்களுக்கு ரூ. 20,000/- பெறுமதியான ஏழு தனித்தனி புலமைப்பரிசில்களை வழங்கியது.
பரிசளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நெத்மினி முத்துமால, இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையரின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி நெலுகா நாணயக்கார, சேவை வனிதையர் பிரிவின் பெண்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.