28th October 2022 21:46:22 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன மற்றும் சேவை வனிதையர் பிரிவினர் இனைந்து அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது இலங்கை சிங்க படையணியினரின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர்.
பிள்ளைகளை மகிழ்விக்கும் நோக்கத்துடன், இந்த சிறப்பு நிகழ்வானது வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி, பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை சிங்க படையணி உறுப்பினர்களின் பிள்ளைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.