09th December 2022 15:51:49 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்கள் சேவை வனிதையர்களுடன் 2022 நவம்பர் 26 ஆம் திகதி அனுராதபுரம் 'அபிமன்சல-1' நலன்புரி நிலையத்தில் வசிக்கும் காயமுற்ற போர் வீரர்களின் நல்வாழ்வைக் கவனிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தனர்.
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 25 காயமுற்ற போர்வீரர்களுக்கு 10 டவல், ரெக்குகள், 10 அவசர எல்இடி மின் விளக்குகள் பரிசுப்பொதிகள் மற்றும் சுகாதார உபகரணங்களை விநியோகித்ததுடன், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர். மாலையில் கலிப்சோ இசைகுழுவால் வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் போர் வீரர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.
இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி, படையணி தலைமையக படையலகு கட்டளை அதிகாரி, அதிகாரிகள் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் 15 சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.