04th January 2023 09:43:27 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேலும் ஒரு சிவில் சமூகத் திட்டமாக, இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜெயவர்தன தலைமையிலான சேவை வனிதையர் குழு அம்பேபுஸ்ஸ, தனோவிட்ட'சந்தெல்ல' முதியோர் இல்லத்திற்கு22 டிசம்பர் 2022 அன்று விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் 33 முதயோர்களின் பயன்பாட்டிற்காக 33 பரிசுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய சுகாதார பொருட்கள் விநியோகிக்கப்பட்டன, அவர்களுக்கு சேவை வனிதையரால்காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டதுடன், இசைக் குழுவினரால்முதயோர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.
இலங்கை சிங்கப் படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமால, தலைமையக படையலகின் கட்டளை அதிகாரிலெப்டினன் கேணல் எல்எம்கேஎஸ் ஞானரத்ன, மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்