Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th January 2023 08:34:34 Hours

இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையரால் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்

இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் புத்தாண்டை முன்னிட்டு 30 டிசம்பர் 2022 அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தின் 57 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தளபதி அலுவலகம் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய இத்திட்டத்தில் ஒவ்வொரு உலர் உணவுப் பொதியிலும் பருப்பு, அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள் போன்றவை அடங்கியிருந்தது.

இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன, இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.