18th February 2023 16:27:47 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு திங்கட்கிழமை (13) அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் தனது காயமடைந்த போர்வீரர்கள், சேவையில் இருக்கும் பணியாளர்களின் பிள்ளைகள், சிவில் ஊழியர்களின் பிள்ளைகள், உயிரிழந்த போர்வீரர்களின் பிள்ளைகள் மற்றும் தகுதியான பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டத்தில் இலங்கை சிங்கப் படையணி உறுப்பினர்களின் 595 குடும்பங்களின் 1365 மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்தனர். இந்த தொகையானது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நெத்மினி முத்துமாலா அவர்கள் பிரதம அதிதியான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை வரவேற்றதுடன், நிகழ்வின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் மங்கள தீபம் ஏற்றி வரவேற்பு உரையும் வழங்கினார். நிகழ்வின் போது 100 மாணவர்கள் தமக்கான பாடசாலை உபகரணங்களை பிரதம அதிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அங்கிருந்த இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் தங்கியிருந்த போது இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் "திரிய பியச" திட்ட மையத்திற்கு விஜயம் செய்தார். அன்றைய நிகழ்ச்சியின் முடிவில் திருமதி ஜானகி லியனகே விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் ஒரு பாராட்டுக் குறிப்பையும் எழுதியதுடன் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் நினைவுச் சின்னமாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு சிறப்பு பாராட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் நளிந்திர மஹாவிதான, இலங்கை சிங்கப் படையணியின் பிரதி நிலைய தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.