Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th March 2023 10:39:52 Hours

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையரால் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பெண் படையினருக்கு பயனுள்ள பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து கற்பிக்கும் நோக்கத்துடன் சனிக்கிழமை (மார்ச் 11) அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் செயலமர்வை ஏற்பாடு செய்தது.

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த விரிவுரைகள் தேசிய அருங்கலைகள் பேரவையின் பங்கு, பணிகள் மற்றும் காய்கறிகள், மிளகாய்களை உள்நாட்டுப் பயிர்களாகப் பயிரிடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. தேசிய அருங்கலைகள் பேரவையின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி திருமதி தாரக திலினி குலதுங்க மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் திருமதி கோசலி குணசேகர ஆகியோர் முறையே விரிவுரைகளை வழங்கினர்.

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின், தலைமையில், மங்கள விளக்கு ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கை சிங்கப் படையணி குடும்பங்களைச் சேர்ந்த 30 சிப்பாய்களின் மனைவியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.