Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

31st May 2023 20:34:50 Hours

இலங்கை சிங்க படையணிய சேவை வனிதையரால் இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நலத்திட்டம்

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த 25 மாணவர்களுக்கு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவர்களின் சாதனைகளுக்குப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி ராணி ஜயதிலக்க ஆகியோரின் அனுசரணையுடன், நாட்டின் எதிர்காலத் தலைவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

பரீட்சையில் 170 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 19 பேர் நன்கொடை பெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 67 மாணவர்களுக்கு 500,000/- மதிப்பிலான சீருடைப் பொருட்கள் மற்றும் பாடசாலைக் காலணிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, பரம வீர விபூஷண பதக்கம் பெற்ற மறைந்த சார்ஜன்ட் ஈ.எம் அனுர அவர்களின் மனைவியின் கோரிக்கையின் பேரில் வெளிநாடு ஒன்றில் சிக்கித் தவிக்கும் தனது மகளை நாட்டிற்கு அழைத்து வர 400,000/- ரூபா வழங்கப்பட்டது.