23rd June 2023 22:30:26 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஓமிலா ஜயவர்தன அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்தின்விடுதி எண்05 க்கு சனிக்கிழமை (ஜூன் 17) விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, விடுதியில் வசிக்கும் 35 பேருக்கு அத்தியாவசிய பொருட்ககள் விநியோகிக்கப்பட்டதுடன், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினரால் விடுதிக்கு மின்சார கேத்தல் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.இலங்கை சிங்க படையணி கெலிப்சே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியில் மகிழ்விக்கப்பட்டதுடன் சுவையான தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.