09th January 2022 20:33:54 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவு, 2021 டிசம்பர் 9 ஆம் திகதி இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி முகாமில் 2.2 மில்லியன் ரூபா பெறுமதியான இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 2739 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது.
இந்நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.