Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th October 2022 19:02:00 Hours

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நன்கொடை

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 1 வது இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி குடும்பங்களின் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், உடற்பயிற்சி இயந்திரங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகளை நன்கொடையாக வழங்கினர்.

300,000/= பெறுமதியான இப் பொதிகள் செப்டம்பர் 17 பனாகொடை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் முன்னிலையில் விநியோகிக்கப்பட்டது.

இராணுவத் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும் சில அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.