12th October 2022 16:26:37 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினர் தனது நலன்புரி திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில், தியத்தலாவவில் உள்ள 2 (தொ) இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணியில் சேவை செய்யும் அதிகாரிகள் மற்றும் படையினரின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக வாழ்வாதார உதவித் திட்டத்தை 2022 செப்டெம்பர் 25 ம் திகதி மேலும் விரிவு படுத்தினர்.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் ஆகியோருடன் இணைந்து தியத்தலாவ 2 (தொ) இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பரிசு காசோலைகளை வழங்கினார். திட்டத்தின் மொத்தப் பெறுமதி 250,000/= ரூபாவாகும். மேலும் அந்த பரிசு காசோலைகள் முன்னணி சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள், துணிக்கடைகள் போன்றவற்றில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும். இந் நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.