14th November 2022 21:09:51 Hours
கம்புருபிட்டிய அபிமன்சல - 2 நல விடுதியில் வசிக்கும் போர்வீரர்களின் நலன் விசாரிப்பதற்காக இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்கள் 2022 ஒக்டோபர் 28 விஜயத்தை மேற்கொண்டார்.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அனுசரணையில், தலைவி அவர்கள் விஜயத்தின் போது ஒவ்வொரு மாற்றுத்திறனாளி போர் வீரருக்கும் பானங்கள் அடங்கிய இனிப்பு பொதியை பரிசாக வழங்கினார். ஓய்வு நேரத்தில் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பொருட்களும் அதே சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும் சேவை வனிதையர் பெண்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.