02nd December 2022 09:02:50 Hours
முல்லைத்தீவு 6 வது இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் கிளிநொச்சி 7 வது இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி முகாமில் உள்ள சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்துடன் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களால் நவம்பர் 18 பரிசுகள் வழங்கப்பட்டன.
குடும்பங்களில் உள்ள 25 சிறார்களுக்கு ரூபா. 200,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், தலா ரூ.10,000/= க்கான 4 காசோலைகள், மற்றும் 21 பாடசாலை உபகரணப் பெட்டிகள், ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ரூ. 7,800/= ஆகும் இவை அனைத்தும் சிவில் மற்றும் இராணுவ குடும்பங்களில் உள்ள பயனாளிகளுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது.
இந்தச் சுருக்கமான நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி நிலைய தளபதிகள் பிரிகேடியர் சஞ்சய பத்திரன,பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்