Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th December 2022 12:59:53 Hours

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் மாணவர்களுக்கு மா பெறும் திட்டம் அறிமுகம்

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் நலன்புரிப் திட்டங்களை மேலும் மேம்படுத்தும் வகையில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி குடும்பங்களைச் சேர்ந்த 2702 மாணவர்களுக்கு கொழும்பு 2 பாதுகாப்புச் சேவை கல்லூரி கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கியது. நிகழ்வில் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 25 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட தனியான புலமைப்பரிசிளும் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களால் மற்றும் ஏனைய சிரேஷ்ட இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மெகா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு 54 மாணவர்களைக் கொண்ட பிரதிநிதி குழு திட்டத்தில் பங்கேற்றது. இந்நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். மேலும், நிகழ்வில் அமில டயர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு.சமந்த ஹேவகீகன அவர்களால் ரூ. 500,000/= அதிகாரவாணையற்ற அதிகாரியின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டின் நிர்மாண பணிகளுக்கு வழங்கப்பட்டது.