06th January 2023 13:16:33 Hours
கன்னொருவை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அனுசரணையில், தலா ரூ. 10,000/- பெறுமதியான அரிசி, பருப்பு, டின் மீன், சோயா, பெரிய வெங்காயம், சீனி, தேயிலை, கருவாடு, உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கிய பொதிகள் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சாமந்தி குணசிங்க மற்றும் சேவை வனிதையர் பிரிவின் நிர்வாக உறுப்பினர்களால் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
2022 டிசம்பர் 08 வளாகத்தில் நடைபெற்ற அந்தப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களும் இணைந்துகொண்டார்.
இந்த நிகழ்வு இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 73 வது ஆண்டுநிகழ்விற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டது. வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், மற்றும் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோகத் திட்டத்தில் பங்குபற்றினர்.