23rd January 2023 16:44:09 Hours
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவு தனது நலன்புரிப் பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் 'ப்ளூ பெல் நைட் - 2022' என்ற ஒரு இசை பொழுதுபோக்கு நிகழ்ச்சியை செவ்வாய்கிழமை (டிசம்பர் 06) ஹேவ்லாக்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அரங்கேற்றியது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் கருத்துப்படி இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவுகளுக்கு நிதி சேகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரபலமான மற்றும் பரபரப்பான "டூ /போட்டி டூ போட்டு எடி" இசைக்குழுக்களின் இசையில் பிரபலமான பாடகர்கள் பங்குபற்றினர். இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திங்கட்கிழமை (ஜனவரி 02) 'புளூ பெல் நைட்' நிகழ்ச்சியின் வருமானத்தின் ஒரு பகுதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு நன்கொடையாக 1 மில்லியன் ரூபாவை கை