08th May 2023 09:30:02 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணியின் (ஓய்வு) கெப்டன் ஆர்எம் ரத்னபால அவர்களுக்கு அண்மையில் சக்கர நாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
பண்டாரவளையில் வசிக்கும் ஓய்வு பெற்ற அதிகாரி நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
மேலும், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஒருவரின் ஊனமுற்ற தாயரின் அவல நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
சேவை வனிதையர் பெண்களின் ஆதரவுடன் இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அந்த மருத்துவ உதவிகளை நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டு திட்டங்களை முன்னெடுத்தார்.