19th May 2023 19:58:50 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்கள் திங்கட்கிழமை (மே 01) இந்துருவையில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டார்.
ஆரம்பத்தில், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினர் இந்த வீட்டைக் கட்டுவதற்காக ரூ. 500,000/- நிதி உதவி வழங்கினர்.
புதிய வீட்டை மேலும் மேம்படுத்துவதற்கு அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு தலைவி அறிவுறுத்தல்களை வழங்கினார். இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் அவருடன் இணைந்திருந்தனர்.