06th September 2023 18:44:46 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 19 ஓகஸ்ட் 2023 அன்று புனர்வாழ்வு பெறும் போர்வீரர்களின் நலன் குறித்து விசாரிக்கும் நோக்கில் அனுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சல - 1' நல விடுதிக்கு விஜயம் செய்தனர்.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் தங்களுடைய விஜயத்தின் போது போர் வீரர்களுடன் உரையாடி அவர்களின் சொந்த நலம் பற்றி மட்டுமல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன் பற்றியும் விசாரித்தனர். இக் கலந்துரையாடல் மூலம் அவர்களின் அனுபவங்களை மற்றும் விடயங்களை அறிந்து கொள்ள முடிந்ததுடன் இதன் போது அவர்களின் அக்கறை மற்றும் கணிவு தன்மை குறித்து அறியகூடியதாக காணப்பட்டது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினர் புறப்படுவதற்கு முன் ஒவ்வொரு போர்வீரருக்கும் ஒரு பெட்-ஷீட், ஒரு குளியல் துவாய், இரண்டு தலையணை உறைகள் ஆறு சவக்கரகட்டிகள், ஆறு சவரங்கள் கொண்ட ஒரு பொதி, ‘சித்தலேப’ போத்தல் ஒன்று, பற்பசை இரண்டு, பற்தூரிகைகள் இரண்டு, ஒரு குடை, ஒரு பத்திக் சாரம் மற்றும் ஒரு சட்டை என்பவற்றினை கொண்ட பொதியினையும் வழங்கினர்.
இந் நிகழ்வில் மேலும் சிறப்பம்சமாக அவர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. நலவாழ்வு விடுதியின் சக்கர நாற்காலியில் உள்ள போர் வீரர் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி.ரஜிதா ஜெயசூரியவை வரவேற்றார்.