06th September 2023 18:58:12 Hours
இராணுவப் புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் உறுப்பினர்கள் மாதாந்தம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அம்பலாங்கொடையில் உள்ள வருசவிதான முதியோர் இல்லத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரஜிதா ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுத்தனர்.
இதன் போது 20 முதியோர்களுக்கு 3 வேளை உணவுகளையும் வழங்கினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.