05th September 2023 23:51:04 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு அதன் நலன்புரி நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 4) பனாகொடவுக்குச் சென்று, கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான இராணுவ வீரர்களுக்கு அவர்களின் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கும் முயற்சியில் 100 உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தியல் கருத்துக்கு இணங்க, இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்துகொண்டு பனாகொடவில் உள்ள இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் நிவாரணப் பொதிகளை வழங்கினார்.
மங்களவிளகேற்றலுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகியதனை தொடர்ந்து சேவை வனிதையர் கீதம் பாடப்பட்டதுடன் சேவை வனிதையர் பாத்திரங்களை விளக்கும் வீடியோ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இராணுவ அதிகாரியினால் முன்மொழியப்பட்ட நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீஎஸ்சி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்குபற்றினர்.