31st August 2023 19:57:51 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்தக்கூட்டம் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அன்றைய நிகழ்ச்சியின் முதல் விரிவுரையானது சேவை வனிதையர் பிரிவின் சேவைகளை மையமாகக் கொண்டது இரண்டாவது அமர்வில் ‘சுய அன்பும் கோப முகாமை’ என்ற தலைப்பில் விரிவுரை நடைபெற்றதுடன் இவ்விரிவுரை உந்துதல் மற்றும் ஆலோசனை பற்றிய விரிவுரையாளர் திரு. ஹசிதஹேவாவசம் அவர்களால் நடத்தப்பட்டது.
சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இவ் அமர்வில் பங்கேற்றனர்.