31st August 2023 19:52:29 Hours
விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, திருமதி குமுது மானகே, வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 18) பதவியேற்கும் புதிய தலைவியிடம் தனது கடமைகளை கையளித்தார்.
இந்நிகழ்வின் போது சார்ஜன்ட் ஒருவரின் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக 30,000/= நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோன்று மேலும் வீடு எரிந்து நாசமாகி மின்சார இணைப்பபை சரிசெய்வதற்காக சார்ஜன்ட் ஒருவருக்கு 30,000/= நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலும், லான்ஸ் கோப்ரல் ஒருவரது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 30,000/= வழங்கப்பட்டது. அதே சந்தர்ப்பத்தில் சிவில் ஊழியர் ஒருவருக்கும் மருத்துவ சிகிச்சைக்காக நன்கொடையாக ரூ. 10,000/= அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேவை வனிதையர் கிளையின் சிரேஸ்ட உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.