31st August 2023 19:54:31 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 23)படையணி தலைமையகத்தில் உள்ள சேவை வனிதையர் அலுவலகத்தில் பதவியேற்றார்.
இந்நிகழ்வில் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் உரையாற்றிய திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்கள் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவராக இருக்கும் காலத்தில் தான் செயல்படுத்த விரும்பும் முயற்சிகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை அளித்தார்.
நிகழ்வின் போது, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கோப்ரல் ஒருவருக்கு ரூபாய் 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.
இல்லத்திற்கு மின்சாரம் தேவைப்படும் மற்றொரு லான்ஸ் கோப்ரல்க்கு நிதி உதவியாக ரூ. 30,000/- வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.