17th June 2023 21:14:32 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி செனாலி துல்கா ஹேரத் அவர்கள் சனிக்கிழமை (ஜூன் 10) தம்புலுஹல்மில்லேவவில் உள்ள இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையக அதிகாரிகள் உணவக தொகுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைப் பொறுப்பேற்றார்.
தமது புதிய தலைவி திருமதி செனாலி துல்கா ஹேரத் அவர்களை உபதலைவி திருமதி நிலாந்தி வணசிங்க, செயலாளர் திருமதி சுவர்ணமாலி ஏக்கநாயக்க மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
மங்கள விளக்கு ஏற்றலுடன் விழா தொடங்கியதுடன், புதிய தலைவர், உப தலைவர், செயலாளர் ஆகியோர் உரையாற்றினர். ஆண்டுத் திட்டம், புதிய திட்டங்கள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து இந்த நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டது.