26th January 2022 14:40:08 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமிற்கு அருகில் இங்கிரிய பகுதியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'Gallant' குடிநீர் போத்தல் உற்பத்தித் திட்டம் இலங்கை இலேசாயுத படையணியின் தளபதியும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களினால் ஜனவரி 12 திறந்து வைக்கப்பட்டது.
அங்குரார்ப்பண நிகழ்வு நிறைவு பெற்றவுடன் திருமதி ஷிரோமலா கொடிதுவக்கு அர்களின் தலைமையிலான சேவை வனிதையர் பிரிவிற்கு அதன் நிருவாகம் மற்றும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள்,இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி மற்றும் சிப்பாய்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.