04th March 2022 10:06:28 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு தலைமையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில், ‘தொற்றா நோய்கள் மற்றும் அந்த நோய்களைக் கண்டறிதல்’ தொடர்பான செயலமர்வு அண்மையில் பனாகொடவில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் ஆலோசனையின் பேரில், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ‘ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்’ எனும் திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.
இந்த செயலமர்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், இத்தகைய நோய்களை தடுப்பதற்கு உதவும் வகையில் அறிவு மற்றும் பொதுவான கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.