20th April 2022 16:24:08 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பேக்கரி, யோகட் திட்டம், குடிநீர் போத்தல் உற்பத்திப் பிரிவு என்பவற்றில் சேவையாற்றும் ஊழியர்களுக்கும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கும் திங்கட்கிழமை (11) புத்தாண்டு சிறப்பு பரிசுகளை வழங்கினர்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர்களின் பங்களிப்பை பாராட்டி இப் பரிசுகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.