07th June 2022 16:49:02 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்கள் மற்றும் நாட்டிகாக உயிர் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களுக்கும் ஆசீர்வாதங்களைப் வழங்குவதற்காக 28 மே 2022 பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் தலைமையகத்தில் தர்ம பிரசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்திற்குரிய (கலாநிதி) இந்துராகரே தம்மரதன தேரர் சொற்பொழிவு நிகழ்த்தியதுடன், மறைந்த மற்றும் சேவையாற்றும் இராணுவ வீரர்களின் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளையும் நினைவுகூர்ந்தார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் இத்திட்டத்தை முன்னெடுக்க அறிவுறுத்தல் வழங்கினார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த பீரிஸ் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு, பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.