28th October 2022 21:42:29 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை (21) அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' வில் சிகிச்சை பெற்றுவரும், போர் வீரர்களின் நலன் விசாரிக்கும் நோக்குடன் விஜயம் மேற் கொண்டார்.
இவ் விஜயத்தின் போது, மிஹிந்து செத் மெதுரவில் உள்ள ஒவ்வொரு போர் வீரர்களுக்கும் பெறுமதியான முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.
திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு தலைமையிலான குழுவினர், விடுதியில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கெலிப்சோ இசைக்குழுவை வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்.
சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகளும் விஜத்தில் இணைந்து கொண்டனர்.