14th February 2023 22:14:13 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் மேலும் ஒரு நலன்புரி திட்டமாக அண்மையில் மீகொட நடுஹேன மகாபோதி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர். நன்கொடை நிகழ்வின் பின்னர், இசை நிகழ்ச்சிக்கு முன்பு அவர்களுக்கு ஒரு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.