18th February 2023 16:48:20 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்கள் புதன்கிழமை (15) அத்திடியவில் உள்ள 'மிஹிந்து' செத் மெதுர நலன் விடுதிக்கு விஜயம் செய்து, அங்கு வசிக்கும் போர்வீரர்களின் நலன் விசாரித்தார்.
தனது விஜயத்தின் போது, திருமதி தனுஷா வீரசூரிய அந்த போர்வீரர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன், நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தார். இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினர் தலைவி தற்போது சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் பயன்பாட்டிற்காக 32 அங்குல வர்ண எல்இடி தொலைக்காட்சி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
அவர், அவர்களுடன் தேநீர் அருந்தியதுடன் கெலிப்சோ இசை குழுவினர் அவர்களுக்கு பொழுதுபோக்கான இசை நிகழ்வை வழங்கினர்.
இந் நிகழ்வு இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டது.